சென்னை: சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பரிசோதனை அடிப்படையில் இனி சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் காலை 6.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்டரல்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12675) திருவள்ளூருக்கு காலை 6.43 மணிக்கு வந்தடையும்.
அதன்பிறகு இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், வாலாஜாபேட்டை, காட்பாடி, ஆம்பூர், சேலம் வழியாக கோவைக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடையும்.
இதன் காரணமாக அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி மற்றும் ஆம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில் வந்து செல்லும் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திற்கு காலை 7.03 மணிக்கு வரும் இந்த ரயில் 7.08 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்படும்.
அதேபோல், வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கும், காட்பாடி ரயில் நிலையத்திற்கு 8.03 மணிக்கும், ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு 8.43 மணிக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]