மும்பை: பெங்களூரு அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

புள்ளிப் பட்டியலில், பெங்களூரு அணி முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாமிடத்திலும் உள்ளன. எனவே, இன்றையப் போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.

பெங்களூரு அணி, இந்தமுறை, தொடக்கம் முதலே, பெரியளவில் எழுச்சி கண்டுள்ளது. அந்த அணி, இதுவரை தான் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை. சென்ன‍ை அணியும், முதல் போட்டியில் தோற்றபிறகு பெரியளவில் மேம்பட்டுள்ளது. இன்றையப் போட்டி சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னை அணியில், மொயின் அலி இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, இம்ரான் தாஹிருக்கு முதன்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.