அகமதாபாத்: நாடு முழுவதும் அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதுபோன்ற மிரட்டல் மெயில்களை அனுப்பிய சென்னையைச்சேர்ந்த பெண் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை குஜராத் மாநில காவல்துறை கண்டுபிடித்து, சென்னையில் வைத்து கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் பெயர்  ரெனே ஜோஷில்டா  என்பதும், இவர் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பணியாற்றி வருவதுடன், ஒருதலை காதல் மோகத்தில், என்ன செய்வது என்று தெரியாமல் ,  காதலன் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

. கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பள்ளிக்கு வந்த  குஜராத் தீவிரமாக  சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்காத நிலையில், அது புரளி என கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஆமதாபாத்தில் இருக்கும் பிரபலமான,  நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களை குறித்து,  அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது.  நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மட்டும் 13 முறை இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.

மேலும் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு நான்கு முறையும், திவ்ய ஜோதி பள்ளிக்கு மூன்று முறையும், பி.ஜெ.மருத்துவ கல்லூரிக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.

இதையடுத்து குஜராத் காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து,  தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, இந்த மிரட்டல்கள் அனைத்தும்,  போலி இ-மெயில் ஐ.டியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற (ஜுன் 12ந்தேதி) அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர்இந்திய விமான விபத்தைத் தொடர்ந்து,  ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. இதனால்,  குஜராத் சைபர் பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார், எங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது என்பதை கண்டறிந்தனர்.

அதன்படி, வெடிகுண்டு மிரட்டலை விடுத்து வந்த பெண், சென்னையை சேர்ந்த ஐ.டி.பெண் ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை குஜராத் போலீசார் அவரை கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை அகமதாபாத்தின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. விரிவான டிஜிட்டல் விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷில்டா, தமிழ்நாட்டின் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். டிஜிட்டல் கால்தடங்களின் விரிவான தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தடயவியல் பரிசோதனை மூலம் 21க்கும் மேற்பட்ட அச்சுறுத்தல் மின்னஞ்சல்களை அனுப்பியவர் என அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டனர்.

சென்னையில் உள்ள டெலாய்ட் யுஎஸ்ஐயில் மூத்த ஆலோசகராக 2022 முதல் பணியாற்றி வரும் ஜோசில்டா, தனது அடையாளம் மற்றும் தோற்றத்தை மறைக்க பல VPNகள், பெயர் குறிப்பிடப்படாத மின்னஞ்சல் சேவைகள் மற்றும் டார்க் வலையில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆகமதாபாத் குற்றப்பிரிவு இணை கமிஷனர்,  பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்  சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்பவர், இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் தெரிவித்தார்.  இந்த இன்ஜினீயர்  போலி இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை,  அவர் திவிஜ் பிரபாகர் என்பவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பிரபாகருக்கு  கடந்த பிப்ரவரி மாதம் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விட்டது. இதனால், விரக்தியில் இருந்த அந்த பெண், அவரை பழிவாங்குவதாக எண்ணி, அவரது பெயரை பயன்படுத்தி போலி இ-மெயில் ஐ.டி, டார்க் வெப் போன்றவற்றை பயன்படுத்தி தனது அடையாளத்தை மறைத்து  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்த பெண்,  குஜராத் மட்டுமல்லாது மராட்டிய மாநிலம் உள்பட 11 மாநிலங்களுக்கும் அவர் 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என அவர் கூறினார்.

VPN பயன்படுத்தி சக ஊழியர் பெயரில் இமெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரினே ஜோஸ்லிடா, போலி இமெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இமெயில் கணக்கையும் பயன்படுத்தியதால் போலீசில் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.