சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவு அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து வீடியோவாக எடுத்த ஞானசேகரன் என்ற திமுக பிரமுகர், அதை வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததுடன், தான் கூறும் நபரிடமும் செல்ல வேண்டும் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட இளம் மாணவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் காவல்துறையில் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை பாலியல் வன்புணர்வு செய்த நபர், வீடியோவை காட்டி மிரட்டியதாகவும், பல்கலைக்கழக டீனிடம் சொல்லி டிசி வாங்கிக் கொடுத்து விடுவதாக கூறியதுடன், வீடியோவை மாணவியின் தந்தைக்கும் அனுப்புவதாக தெரிவித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நபர், தன்னை மிரட்டும் போது யாரோ ஒருவரிடம் போனில் பேசியதாகவும், புகாரில் அந்த மாணவி தெரிவித்திருந்தார். அந்த மாணவி யாரோ ஒரு சாருடன் இரவு தங்க வேண்டும் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பகுதியில் பிரியாணி கடை போட்டுள்ள திமுக பிரமுகரான ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்மீது ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளது. பதிவேறு குற்றவாளியான ஞானசேகர் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவி கொடுத்த புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை லீக்கானது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்ஆணையர், அருண் குற்றவாளிகளுக்கு சாதகமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளத. இதனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பூதாகாரமாகி உள்ளன. இதையடுத்து யார் அந்த நபர் என்று கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது சட்டடையில், யார் அந்த நபர் என்று பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்து சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலை வளாகத்தின் வெளியே அதிமுக மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இருந்தாலும் அங்கு வந்த அதிமுக மாணவர் அணியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தின்போது, அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்நது அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்று நேரடி விசாரணை..!!