சென்னை: வெளி மாநில மாணவர்களுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியே நடைபெறுகிறது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது.
அதற்கான விண்ணப்பங்கள் பதிவு நாளையுடன் முடிகிறது. இந் நிலையில், கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்கான பிஇ, பிடெக், எம்சிஏ, பி ஆர்க் படிப்புகளுக்கான விண்ணப்பம் செப்டம்பர் 30 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையம் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel