சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நிர்வாக பணிகளுக்காக தற்போதுள்ள சென்னை மாநகராட்சியின் 15 இடங்களை 22 ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி, 15 ஜோனலாக பிரிக்கப்பட்டு, பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  சமீபத்தில் மாகராட்சிக்கான  தேர்தல் நடை பெற்று முடிந்து பிரியா மாநகர மேயராக பதவி ஏற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும், நிர்வாக வசதிகளுக்காக மாநகராட்சி மண்டலங்களை அதிகரிப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் உள்பட தமிழகஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சியின் எல்லைகளும் விரிவடைந்துள்ளன. கடந்த  2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களும் 155 வார்களும் இருந்தது. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அதே வேளையில் சென்னை  மாநகராட்சியில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள். மீதமுள்ள மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.  இந்த தொகுதிகள் சென்னையுடன் இணைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து. சென்னையில் உள்ள எம்எல்ஏ தொகுதிகளுக்கு இணையாக தற்போது செயல்பாட்டில் உள்ள 15 மாநகராட்சி மண்டலங்களை  22 மண்டலங்களாக உயர்த்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. நிர்வாகத்தை எளிதாக்கவே மேலும் 7 மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்றும், இதனால்,  மக்கள் பிரதிநிதித்துவத்தையும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி ஆணையகர் ககன்தீப் சிங்பேடி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், முதற்கட்டமாக, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் சீராய்வு செய்யப்பட உள்ளன. தற்போது, மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் எட்டு வார்டுகள் மட்டுமே உள்ளது. அதே நேரம், தேனாம்பேட்டை மண்டலத்தில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து மண்டலங்களிலும் நிர்வாக வசதிக்கு ஏற்ப, வார்டுகளை மறுசீராய்வு செய்யப்பட்டு மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, தற்போது நடைமுறையில் உள்ள  மணலி மண்டலத்தில் மணலி, மாதவவம், பொன்னேரி உள்ளிட்ட 3 தொகுதிகள் உள்ளன. திரு.வி.நகர் மண்டலத்தில் திரு.வி.நகர், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் உள்ளது.

அண்ணா நகர் தொகுதியில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரம் விளக்கும், தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. கேடம்பாக்கத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. வளசரவாக்கம் தொகுதிகயில் மதுரவாயல், ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. இவ்வாறு ஒரு மண்டத்தில் பல சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மறு சீராய்வு தேவைப்படுகிறது. இந்த மறுசீராய்வில், ஐந்து மண்டலங்கள் கூடுதலாக அமைக்கப்படலாம். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 22 மண்டலங்களுடன் நிர்வாகம் செயல்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நேரு, சட்டப்பேரவையில்  சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என,  அறிவித்தார்.

மேலும், சென்னை மாநகராட்சி கட்டிங்கள் மற்றும் கழிப்பறைகள் பராமரிப்புக்கு ரூ.305 கோடி ஒதுக்கப்படுவதாகவும், கழிவுநீர், சாக்கடை பராமரிப்புக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்படுவதாகவும், எரிவாயு தகன மேடை அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பிராட்வே பேருந்து நிலைம் நவீன முறையில் மேம்படுத்தபபட இருப்பதாகவும், மேம்பாலங்களுடன் இணைக்கும் சர்வீஸ் ரோடு அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கப்படுவதாகவும், மணலிப் பகுதி யில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வள்ளுவர்கோட்டம் அருகே மேம்பாலம் அமைக்க ரூ.98 கோடி ஒதுக்கீடு, மழைநீர் வடிகால் திட்டங்களுக்கு ரூ.291 கோடி ஒதுக்கீடு,  24மணி நேரமும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.