சென்னை:

மிழக முன்னாள் முதல்வர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றபோது, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ்களில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்த செவிலியர்களில் ஒருவர் குளோரியா.

இவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அவர் தற்போது சென்னை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் குளோரியாவின் கணவர்  தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது நர்ஸ் குளோரியா  தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையறிந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் குளோரியாவை  காப்பாற்றி சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், ஜெயலலிதா அடித்து கொலை செய்யப்பட்டதாகவும் அதிமுக தொண்டர்களும், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போன்றோர் குற்றம் சாட்டி வரும்  நிலையில்,

கொடநாடு எஸ்டேட் காவலாளி மற்றும் கொடநாட்டில் திருட முயன்றதாக கூறப்படும், ஜெ.வின் முன்னாள் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் போன்றோர் தொடர் மரணம் காரணமாக பல்வேறு யூகங்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் ஆவி ஒவ்வொருவராக பழி வாங்கி வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவலகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஜெயலலிதா வுக்கு அப்பலோவில் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ்களில் ஒருவரான குளோரியாவின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது நர்ஸ் குளோரியா குடும்பத்தோடு தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது மேலும் பல யூகங்களை எழுப்புவதாக கூறப்படுகிறது.

இன்றுதான் எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ தலைவர் ரெட்டி செய்தியாளர்களுக்கு சவால் விட்ட சூழ்நிலையில், அப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.