வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பர் சார்லி கிர்க்  சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்ப நண்பர் டைலர் ராபின்சன்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளதாக  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இதை அதிபர் டிரம்பும் உறுதி செய்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31).  உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே திறந்தவெளி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாடிக்கொண்டிருந்தார். இந்த விவாதத்தில்  சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது,   அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார். பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர் குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டுசன்மானமும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில்,   சார்லி கிர்க்கின் கொலையில் சந்தேக நபர் பிடிபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட  உட்டா கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ், . “நாங்கள் அவரைப் பிடித்தோம்,” என்று தெரிவித்துள்ளார் அவரது பெயர் டைலர் ராபின்சன், தென்மேற்கு உட்டாவைச் சேர்ந்த 22 வயதுடையவர் அவர் உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் (UVU) மாணவர் அல்ல என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். செய்தி மாநாட்டிற்குப் பிறகு, உட்டா மாநில பல்கலைக்கழகம் ராபின்சன் 2021 இல் அங்கு சிறிது காலம் படித்ததை உறுதிப்படுத்தியுள்ளது

ராபின்சன் சமீபத்திய ஆண்டுகளில் “அதிக அரசியல்” ஆனதை ஒரு குடும்ப உறுப்பினர் விவரித்ததாகவும், முன்பு ஒரு உறவினரிடம் கிர்க்கை விரும்பவில்லை என்று கூறியதாகவும் காக்ஸ் கூறினார்

சம்பவ இடத்தில் தோட்டா உறைகளில் “ஏய் பாசிஸ்ட்! பிடி!” உள்ளிட்ட செய்திகள் காணப்பட்டன. மற்றும் “நீங்கள் இதைப் படித்தால் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் lmao” என்றும் எழுதப்பட்ட துண்டுசீட்டுகள் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., இது கிரிக்கை கொலை செய்யும்  நோக்கத்திற்கான சாத்தியமான தடயங்களைத் தரக்கூடும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள்,  அவரது முகநூலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர், மேலும் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

ராபின்சன் எப்படி பிடிபட்டார்?

ராபின்சனின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தனது குடும்ப நண்பரிடம், தான் கிர்க்கைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த நண்பர் இந்த தகவலை ஒரு ஷெரிப்பிற்கு தெரிவித்தார்

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 08:29 மணிக்கு (15:29 BST) ராபின்சன் டாட்ஜ் சேலஞ்சர் வாகனத்தில் வந்திறங்கிய UVU காட்சிகளை புலனாய்வாளர்கள் மதிப்பாய்வு செய்தனர். நான்கு மணி நேரம் கழித்து சார்லி கிர்க் 12:23 மணிக்கு சுடப்பட்டார்

புலனாய்வாளர்கள் ராபின்சனின் அறைத் தோழரை நேர்காணல் செய்தனர், அவர் அவருக்கும் டிஸ்கார்ட் என்ற செய்தியிடல் பயன்பாட்டில் “டைலர்” என்ற பெயருடன் ஒரு கணக்கிற்கும் இடையிலான செய்திகளைக் காட்டினார். “டைலர்” அனுப்பிய செய்திகள், ஒரு துப்பாக்கியை ஒரு துளி புள்ளியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றன.

ராபின்சன் செப்டம்பர் 12 அன்று உட்டாவின் வாஷிங்டனில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். வீடியோ காட்சிகளில் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடைகளுக்கு ஒத்த ஆடைகளை அவர் அணிந்திருந்தார். அதன்மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31).  உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே திறந்தவெளி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாடிக்கொண்டிருந்தார். இந்த விவாதத்தில்  சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது,   அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார். பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட சார்லி கிர்க்    கடந்த 2012-ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இதன்மூலம் தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்தார். இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவது வழக்கம். அந்தவகையில் மாணவர்களிடையே விவாதித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை விவகாரம் தொடர்பான  முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பான  சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வந்த  நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

 சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.