லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்பட 12 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீண்டும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போதுகுற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டடிருந்தது.
அதைத்தொடர்ந்து அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் இன்று லக்னோ வந்தடைந்தனர்.
இதன் காரணமாக லக்னோவில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று மதியம் கோர்ட்டில் ஆஜரான அத்வானி , ஜோஷி, யுமாபாதி உள்ளிட்டோர் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கவேண்டும் என்றும் தனி தாக்கல் செய்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களுக்கும் கோர்ட்டு ஜாமின் வழங்கியது. ஆனால், வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது 120(பி) சட்டப்படி கிரிமினல் சதி பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.