சென்னை
தெற்கு ரயில்வே விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையே ஆன ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். அவ்வகையில் தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நேரமின்மை மற்றும் குறைந்த செலவு காரணமாக ரயில் மூலம் செல்கின்றனர்/
தெற்கு ரயில் வே இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“விழுப்புரத்தியில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதிக்குபுறப்படும் விரைவு ரயில் இன்று (செப்.12) முதல் செப்.20 வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.