நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

China

நிலவில் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கையில் சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக அங்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளை அனுப்பி அவை எவ்வாறு அந்த சூழலில் வாழ்கின்றன, அவற்றில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக சீனாவின் விண்வெளி ஆய்வு மையம், ’சாங் இ 4 மிஷ்ன “(Chang’e 4 Mission) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

moond

அதன்படி, பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியான வோன் கர்மான் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ள சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் கடந்த டிசம்பர் மாதம் விண்கலம் ஒன்றை அனுப்பியது. இது சீனாவின் ஷிசாங் விண்வெளி நிலையத்தில் இருந்து லோங் மார்ச் 3பி என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக விண்வெளியை அடைந்த அந்த விண்கலம் இன்று காலை நிலவின் மறுப்பகுத்தின் கரடுமுரடான பகுதிகளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை அனுப்பியதன் மூலம் சீனா வரலாற்று சாதனையை படைத்துள்ளது. நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சீனா பெற்றுள்ளது. இதன் மூலம் நிலவில் உள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.

space

பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.