கொல்கத்தா

காங்கிரஸ் மற்றும் பாஜக வுக்கு  எதிராக மூன்றாம் அணியை உருவாக்க முயலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலொசனை நடத்த உள்ளர்.

வரப் போகும் 2019 தேர்தலில் பாஜக வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டணையை அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.   அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும்,  இடது சாரிகளையும் இணைக்கும் நடவடிக்கையில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்க தெலுங்கானா ராஷ்டிர்ய சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ரெட்டி ஈடுபட்டுள்ளார்.     அவரது முயற்சிக்கு ஆதரவு திரட்ட இன்று அவர் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூன்றாவது அணி அமைத்தால் ஆதரிப்பதாக ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்ச தலைவர் ஹேமந்த் சோரன் போன்றோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.