க்னோ

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று லக்னோவில் மாயாவதியையும் மற்றும் அகிலேஷ் யாதவையும் சந்திக்க உள்ளார்.

மக்களவை தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வரும் 23 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வர உள்ளன. இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் போட்டி என்றாலும் மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன.

பாஜகவுக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு முயற்சிகள் எடுத்து வருகிறார். அனைத்துக் கட்சிகளையும் தேர்தள் முடிவுகள் வரும் முன்பு ஒருங்கிணைத்து பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே அவர் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திமுக வுடன் பேசி உள்ளார். இன்று சந்திரபாபு நாயுடு உத்திரப்பிரதேச மாநிலம் செல்கிறார். அவர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யதவ் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தினமான மே 23 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.