ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சராக இருக்கிறார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திர பாபு நாயுடு, பிரதான எதிர்க்கட்சி தலைவர். அரசியல் ரீதியாக மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் அந்த கட்சி வி.ஐ.பி.க்கள் மோதிக்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அந்த கட்சியின் செய்தி தொடர்பாளருமான ராம்பாபு,’’ ஐதராபாத் நகரையே, சந்திரபாபு நாயுடுவும், அவர் மகன் நர லோகேஷும் தங்கள் எல்லையாக சுருக்கி கொண்டு விட்டனர்’’ என்று குற்றம் சாட்டினார்.
‘’ அப்பா சந்திரபாபு நாயுடுவுக்கு, வீடியோ கான்பரன்ஸ் உரையாடல் தான் கதி. மகன் லோகேஷ், ட்விட்டரே உலகம் என மூழ்கி கிடப்பவர்’’ என போட்டு தாக்கிய ராம்பாபு,’’ அவர்கள் இருவருமே, ஆந்திர குடிமகன்களே அல்ல.’ என்று சாடினார்.
‘’ சந்திரபாபு நாயுடுவை ஊடகங்கள் தான் பெரிய ஆளாக வளர்த்து விடுகிறார்கள்’’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-பா.பாரதி.