சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 2,3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமகத்தில்ல் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது”

எனத்  தெரிவித்துள்ளது.