சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதக தெரிவித்துள்ளது.

சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.