சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளட்காக தெரிவித்துள்ளது
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
, தமிழகத்தின் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்னாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.