சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.