சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நில்வுதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இப்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது,கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.