சென்னை
பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து அவற்றை மாநில அரசுகளுக்கு பங்கிட்டு அளித்து வருகிறது. தடுப்பூசி உற்பத்தி தேவைக்கு ஏற்றவாறு இல்லை.
இதனால் நாடெங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அவ்வப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு பணிகள் தொடர்கின்றன. இதையொட்டி தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை அதிகரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
அவ்வகையில் தமிழகத்தில் செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள தடுப்பூசி மையம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு விரைவில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இங்கு கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் இது குறித்து நாளைய டில்லி பயணத்தில் உறுதி செய்ய உள்ளார்.