சென்னை: தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி வரை (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வெளிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடு துறை, கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
16-11-2024 மற்றும் 17-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-11-2024 முதல் 21-11-2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதனிடையே, நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இதனால், காலை நேரத்தில் இதமான சூழல் நிலவுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், பள்ளிக்கு மற்றும் அலுவலகம் செல்வோர் குடையை எடுத்து சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.