சென்னை:
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 36 டிடிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.