தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Must read

சென்னை:
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article