லண்டன்,

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்ரிக்கா 299 ரன்கள் குவித்தது.

இன்று நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும், தென்ஆப்பிரிக்கா வுக்கும் இடையே பலப்பரீட்சை நடைபெற்றது.

இலங்கை தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது இலங்கை.

தென்னாப்ரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹசீம் அம்லா மற்றும் குவின் டி காக் ஆகியோர் களமிறங்கினார். இலங்கை வீரர்களின் பந்துவீச்சில்  44 வது ரன்களில், பிரதீப் பந்துவீச்சில் குவின் டி காக் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து  அதிரடி வீரர் டூ பிளிசிஸ் களமிறங்கி   ரன்களை குவித்தார். 75 ரன்கள் குவித்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டி வில்லியர்ஸ் 4 ரன் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார். ஆட்டத்தின் 41 வது ஓவரில் 115 பந்து களில் அம்லா  அணிக்கு உத்வேகத்தை கொடுத்தார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது.

அணியின் டுமினி 38 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.