ஜார்கண்ட் முதல்வர் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் அப்போதைய முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார், அதைத் தொடர்ந்து சம்பை சோரன் முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 மாத சிறைவாசத்துக்கு பிறகு ராஞ்சி சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் கடந்த வாரம் வெளியில் வந்த நிலையில் சம்பை சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் இன்று சமர்ப்பித்த நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.