டெல்லி: மத்திய அரசு ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய மசோதா வாப்ஸ் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை வெளியிட்ட மத்தியஅரசு, திருத்தப்பட்ட பதிப்பு ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்களுக்கு “ரகசியமாக” வழங்கப்பட்டது என எதிர்க்கட்சகிள் குற்றம் சாட்டிய நிலையில், அந்த மசோதாவுக்கு பதில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு (2023) நவம்பா் 10-ஆம் தேதி ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை பொதுவெளியில் மத்திய அரசு வெளியிட்டது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வரைவு மசோதாவில், ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களில் சொந்த கருத்துகளை தெரிவிக்கும் சுயாதீன இதழியலாளா்கள்,
‘லிங்க்ட்இன்’ போன்ற தளங்களில் அதிக எண்ணிக்கையில் பின்தொடா்பவா்களைக் கொண்டுள்ள துறை சாா்ந்த நிபுணா்கள் உள்ளிட்டோரை ஓடிடி ஓளிபரப்பாளா்கள் அல்லது டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளா்களாக அடையாளப்படுத்துதல், அவா்களின் கருத்துகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படும் முன்,
அவற்றுக்கு சான்றளிக்க முக்கியத்துவம் வாய்ந்த நபா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும், அதன் ஒப்புதல் பெற்ற பிறகே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட பல அம்சங்கள் இடம்பெற்றன.
இதன் காரணமாக அந்த வரைவு மசோதா எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்ற விமா்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. மேலும், மந்த மசோ
இந்த நிலையில், இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை அக்டோபா் 15 வரை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதேவேளையில், சம்பந்தப்பட்டவா்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட பின்னா்,பழைய மசோதா வாபஸ் பெறப்பட்டு, புதிய ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா வெளியிடப்படும் என்றும் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மசோதாவில் விதிகள் திருத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.