டெல்லி:

பொதுத்துறை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மின்தொகையை 3 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்களுக்கு கடன் சலுகை உள்பட பல்வேறு நிவாரண அறிவிப்புகளையும் மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பொதுத்துறை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு மின் வழங்கல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை 3 மாதங்களுக்குப் பின்னர் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலுவைத் தொகையைச் செலுத்தாததைக் காரணங்காட்டி மின் வழங்கல் நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவைக் குறைக்கக் கூடாது என்றும் அறிவித்து உள்ளது.

மின்வாரிய விதிகளின்படி நிலுவைத் தொகையைச் செலுத்தாத மின்வழங்கல் நிறுவனத்துக்கு மின்சாரத்தின் அளவைப் பாதியாகக் குறைப்பது வழக்கமாக இருந்தது. தற்போது, அதற்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.