டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே மத்திய செயலகம் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக மத்திய செயலக சேவை (CSS) அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காததால், மத்திய அரசு அமைச்சகங்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை வரை கிட்டத்தட்ட 30% பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவது வாடிக்கை.
ஆனால், மோடி அரசு பதவி ஏற்றது முதல் சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொண்டு வரப்படும் நடவடிக்கைகள் காரணமாக, பதவி உயர்வோ, காலியாக உள்ள இடங்களை நிரப்பவோ முன்வரவில்லை. இதற்கிடையில் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதுடன், பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
இதனால், தற்போது பணியில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களும் கடந்த 6 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காததால், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை வரை கிட்டத்தட்ட 30% பணியிடங்கள்ளும் காலியாக உள்ளன. பல அதிகாரிகளின் பதவி உயர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பதவி உயர்வு குறித்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, மத்திய செயலகம் அதிகாரிகள், ஒன்றினைந்து, நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தர்ணாவில் குதித்துள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.