டில்லி
விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி உள்ளார்.
நேற்று டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டோர்சி விவசாயிகள் போராட்டத்தின் போது டிவிட்டர் நிறுவனத்தை மோடி அரசு மிரட்டியதாகக் குற்றம் சாட்டினார். அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடும் கணக்குகளை நிறுவனம் முடக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிடில் டிவிட்டர் ஊழியர்கள் இல்லங்களில் சோதனை நடத்தப்படும் எனவும் மிரட்டியதாக அவர் கூறினார்.
இன்று மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,
“மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து மிரட்டியதாக ஜாக் டோர்ஸி கூறியது பொய்யானது. அவர் இதை எதற்காகச் சொல்லி இருந்தாலும் அது கற்பனை குற்றச்சாட்டு ஆகும். எந்த ஒரு உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் இயங்கும் போது இந்திய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக டிவிட்டர் செய்வதை அறிந்துள்ளனர். தனது சமூக ஊடகத் தளத்தை டிவிட்டர் தவறாக பயனபடுத்தி சிலரது குரலை ஒடுக்கி, சிலரது கணக்குகளை முடக்குகிறது. நேற்று ஜாக் டோர்சி கூறியது என்னை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அவருடைய பேச்சு பொய்யானது மற்றும் தவறானது ஆகும். டிவிட்டர் இந்தியச் சட்டப்பிரிவுகள் 16,19 மற்றும் 21ஐ மீறி உள்ளது.”
எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.