டில்லி
இந்தியாவில் 5 ஜி நெட் ஒர்க் பணிகள் இறுதிக்கட்டத்ஹை எட்டி உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இன்று டில்லியில் இந்தியத் தொலைத் தொடர்பு துறையின் சார்பில் இந்தியா டெலிகாம் 2022 என்னும் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இது இந்திய தொலைத் தொடர்பு துறையினர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்கா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சி இன்று முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது உரையில்,
“இந்தியா பெரியதொரு மின்னணு உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது. இது 20%-க்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இப்போது நாங்கள் ஒரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
இது பல்வேறு பொருட்கள், தொழில்முனைவோர் மற்றும் 85,000 பொறியாளர்களை உருவாக்குவதற்கான மிக விரிவான திட்டமாக இது உள்ளது. நமது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தவரை, 4ஜி கோர் மற்றும் ரேடியோ நெட் ஒர்க் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 5 ஜி நெட் ஒர்க் அதன் இறுதிக்கட்ட வளர்ச்சியில் உள்ளது. இந்தியா நெட் ஒரி வளர்ச்சியில், 6ஜி சிந்தனை செயல்பாட்டில் பங்கேற்று வருகிறது”
எனத் தெரிவித்துள்ளார்.