டெல்லி

வைகோவை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று மாநிலங்களவையில் எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட எம் பிக்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.  அதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துக் கொண்டார்.

ராமதாஸ் அத்வாலே அந்நிகழ்ச்சியில்

”தமிழகத்தில் அன்புமணி ராமதாசோடு நல்ல உறவு இருக்கிறது. அவர் எங்கள் நண்பராக இருக்கிறார். வாஜ்பாய் ஆட்சியில் தி.மு.க.வும் இருந்தது. வைகோ இருந்தார். யார் எப்போது வருவார்? யார் எப்போது போவார்? என்பது யாருக்கும் தெரியாது.

வைகோவை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருக்கு விடை கொடுக்க நான் விரும்பவில்லை. வைகோ எங்களோடு (அதாவது பா.ஜனதா கூட்டணிக்கு) வந்தால் மீண்டும் இங்கு வரலாம். 1998-ம் ஆண்டு அவர் முதல் முறையாக எம்.பி. ஆனபோது நானும் எம்.பி. ஆனேன். அவரோடு பழகி, நானும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு சென்றிருக்கிறேன்.

எங்களுக்கும், வைகோவுக்கும் இடையே சம்பந்தம் உண்டு. தி.மு.க.வுடனும் சம்பந்தம் இருந்தது. சிலர் வருவார்கள், சிலர் போவார்கள். வைகோ இங்கே சிறப்பாக செயல்பட்டுள்ளார். பல கேள்விகளை எழுப்பியுள்ளார். உங்கள் மாநிலத்துக்கு சென்று அங்கும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும்”

என்று உரையாற்றி உள்ளார்