டெல்லி
மத்திய அமைச்சர் இந்திய ரயில்வே தனியார் மயம் ஆகாது என உறுதி அளித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சித்து வருவதாக அ எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் –
“இந்திய ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது,ரெயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் இது தவறான கருத்தாகும். ரெயில்வே தனியார்மயம் ஆகாது.
இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்’
என்று உறுதி அளித்துள்ளார்.r