சென்னை

சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இன்று தெற்கு ர்யில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-

* சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி வழியாக சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயில்  (வண்டி எண்.06741), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 7.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும். அங்கிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8 மணிக்கு செல்லும்.

* சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு கூடூர் வழியாக நெல்லூர் செல்லும் பயணிகள் ரயில் (06745), அதற்கு மாற்றாக சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காலை 9.27 மணிக்கு கூடூர் சென்றடையும். அங்கிருந்து நெல்லூருக்கு காலை 10.30 மணிக்கு செல்லும்.

* சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்”.  

என அறிவிக்கப்பட்டுள்ளது.