டில்லி
நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வேளாண் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்
நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடந்தது. நேற்று முன் தினம் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு நடந்த இந்த கூட்டத்தில் மொத்தம் 77 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதாம்ர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது புதிய அமைச்சர்களை உத்வேகத்துடன் பணியாற்ற மோடி அறிவுறுத்தி உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால தொடரில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் விவாதம் நடந்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு மத்திய நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம், “மத்திய அமைச்சரவை நாட்டில் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்கLai திரும்பப் பெற மாட்டோம். இதையொட்டி போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
மத்திய அமைச்சரவை தென்னை விவசாயத்தை அதிகரிக்கவும் தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரவும் ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தேங்காய் வாரிய தலைமை பொறுப்பு வழங்கப்படும். மேலும் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தவர்களுக்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.