அகமதாபாத்
வரும் சுதந்திர தினம் முதல் மகாத்மா காந்தியைப் போல் வாழ்க்கை நடத்த ஒரு வாய்ப்பு அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

கடந்த 1948 ஆம் வருடம் மகாத்மா காந்தி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்த போதும் அவருடைய கொள்கைகள், வாழ்க்கை முறைகள் குறித்து நம் நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இவ்வாறு காந்தி மீது ஆர்வம் கொண்டோருக்கு அவரைப் போலவே ஒரு வாய்ப்பு அளிக்க மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த யோசனையைக் காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் விழக்கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். அதையொட்டி அமைச்சரவை ஒரு திட்டம் தீட்டி உள்ளது. இந்த திட்டத்தை வரும் சுதந்திரம் தினம் அறிமுகம் செய்ய எண்ணி உள்ளது. இந்த திட்டம் முதலில் காந்தி ஸ்மிருதி என்னும் அமைப்பு குஜராத் மாநிலத்தில் தொடங்க உள்ளது. இது விரைவில் நாடெங்கும் 100 இடங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது.
தற்போது இதற்கான இடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து வரும் காந்தி ஸ்மிரிதி அமைப்பு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்த விவரங்களை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது. முதலில் குஜராத் மாநிலத்தில் தொடங்க உள்ள இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் காந்தி தங்கி இருந்த ஆசிரமங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
அங்கு அதிகாலை பிரார்த்தனை, தோட்ட வேலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல், சோப இல்லாமல் ஷேவிங், மற்றும் குளியல், ராட்டை நூற்றல், தியானம், கடிதம் எழுதுதல், பஜனைகள், கிராம சேவைப் பணிகள், கதர் உடுத்தல் ஆகியவைகள் இடம் பெறும். காதி தனக்கு உணவில் சில கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் மற்றவர்களுக்கு அதைத் திணிக்கவில்லை. எனவே இங்கே அனைத்து சைவ உணவுகளும் வழங்கப்படும்.
குஜராத்தில் இந்த முறை வெற்றி அடைவதைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவு படுத்த உள்ளதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் காந்தி மீது ஆர்வம் கொண்டவர்கள் அனைவராலும் இந்த காந்திய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது எளிதானதல்ல எனக் காந்தி ஸ்மிரிதி அமைப்பினர் கூறி வருகின்றனர்
[youtube-feed feed=1]