நெல்லை

த்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழ் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது.

மத்திய அர்சு தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இந்த மையத்தில் கதிரியக்கம், ரசாயனம் உள்ளிட்டவைகளை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள ராதாபுரத்தில் என் டி ஆர் எப் மையம் செயல்பட உள்ளது. இந்த மையம் அமைப்பதற்கான நிரந்தர இடம் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக ராதாபுரம் மாணவர்கள் விடுதியில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு 24 மணி நேரம் பணியில் இருக்கும் வகையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது., அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன், ரசாயனம், கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை சமாளிக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது.