டெல்லி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது/

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு துறைகள் குறித்து கேள்விகள் கேட்டு வருகின்றன.  மக்களும் இதற்கான விடைகளை அறிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் மத்திய அமைச்சர்கள் பெருமாபாலான கேள்விகளுக்கு விடை அளிப்பதில்லை.  மாறாக பல முக்கிய கேள்விகளுக்கு தங்களிடம் இது குறித்து எவ்வித ஆவணங்களோ விவரங்களோ இல்லை என்பதே பதிலாக உள்ளது.

இதுவரை 12 முக்கிய கேள்விகளுக்கு மத்திய அரசு தன்னிடம் ஆவணங்கள் இல்லை என பதிலளித்துள்ளது.

மத்திய அரசு இவ்வாறு கை விரிப்பதால் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் அர்சின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.