டில்லி
மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதற்கு எதிராகப் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் மற்றும். மத்திய அரசு சார்பில் சொல்சிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.
மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா:-
”நாங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்தத் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம்தான் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது.
இப்பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதைத் தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.
ஏற்கனவே லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. அடுத்த மாதம் கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் எனக் காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது.”
எனக் கூறினார்.
[youtube-feed feed=1]