டெல்லி
மத்திய அர்சு 13 ,056 சதுர கிமீ வனப்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய வனத்துறைக்கு வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய பசுமை தீர்ப்பாயம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப்படி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்தமான்-நிக்கோபார் தீவுகள், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சண்டிகர், சத்தீஷ்கார், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, கேரளா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரா,, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழகம்,, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், சிக்கிம், மத்தியபிரதேசம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய 25 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
ஆனால் இதுவரை பீகார், அரியானா, இமாசல பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்குவங்காளம், நாகாலாந்து, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இதன்படி தமிழகத்தில் 157.68 சதுர கி.மீ. வனப்பகுதியும், கேரளாவில் 49.75 சதுர கி.மீ. வனப்பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், இதுவரை 409.77 சதுர கி.மீ. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.