டில்லி
இந்தியாவுக்கு பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது அரசு சார்பில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டறிந்த மருந்தாகும் இது இந்தியாவில் புனே நகரில் தயாரிக்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியாவில் இருந்து கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்வோரைப் பிரிட்டன் நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இதே தடுப்பூசி மருந்தை மற்ற நாடுகள் தயாரிப்பாக போட்டுக் கொண்டு செல்வோரை மட்டும் அனுமதித்துள்ளது.
இதையொட்டி மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதையொட்டி பிரிட்டனில் இருந்து வருவோர் அனைவரும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இது பிரிட்டன் அரசுக்கு சரியான பதிலடி என ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.