டில்லி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையொட்டி கொண்டாட்டத்துக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு தெரிவித்துள்ள வழிமுறைகள் பின் வருமாறு :
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடமும் உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ஆயினும் கொரோனா பரவி வருவதால் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி உள்ளது. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், சரியான கிருமி நாசினி பயன்பாடு, அதிக கூட்டத்தைத் தவிர்த்தல் மக்களின் பாதுகாப்பு என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. எனவே இந்த விதிமுறைகளை மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடுகிறது. இதன்படி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கூட்டத்தைக் குறைக்க அனைத்தையும் இணைய தளம் மூலம் ஒளிபரப்ப உள்ளது.
மேலே குறிப்பிட்ட நடைமுறைகளின் அடிப்படையில் டில்லியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கீழ்க்கண்டவாறு நடைபெறும்.
- பிரதமருக்கு ராணுவம் மற்றும் டில்லி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை, கொடி ஏற்றுதல், தேசிய கீதம் இசைத்தல், 21 குண்டு வெடிப்பு, பிரதமர் உரை, மூவண்ண பலூன்கள் பறக்க விடுதல் ஆகியவை செங்கோட்டையில் நடைபெறும்.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் உள் வரவேற்பு
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டட்டக்களில் கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்
மாநில அளவு கொண்டாட்டம்
– காலை 8 மணிக்கு மாநில அல்லது யூனியன் பிரதேச தலை நகரங்களில் முதல்வர் கொடி ஏற்றல், காவல்துறையினர், ஊரக காவலர்கள், என் சிசி,ஸ்கவுட், உள்ளிட்டோருக்கு விருது வழங்கல்,, முதல்வர் உரை, தேசிய கீதம் இசைத்தல்
– கொரோனா பரவலால் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும்.
– கொரோனா எதிர்ப்பு பணிபுரியும் மருத்துவர்கள்,சுகாதார ஊழியர், துப்புரவு தொழிலாளர் உள்ளிட்டோரை இந்த நிகழ்வில் அழைத்துக் கவுரவிக்கலாம். அத்துடன் கோரோனாவில் இருந்து குணமடைந்தோரில் சிலரையும் அழைக்கலாம்
மாவட்ட அளவு கொண்டாட்டம்
- மேலே குறிப்ப்பிட்ட்தைப் போல் காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் கொடி ஏற்றல், உள்ளிட்டவைகளை நடத்தலாம். இது மாவட்ட அளவில் அமைச்சர்,ஆணையர், மாவட்ட நீதிபதி, ஆகியோர் கொடி ஏற்றலாம். குறிப்பாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
- கொரோனா பாதுகாப்புக்காக விழாக்களில் அதிக கூட்டம் கூடக்கூடாது
- கொரோனாவை எதிர்த்துப் பணி புரிவோரையும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோரையும் அழைத்துக் கவுரவிக்கலாம்
இதே வழிமுறைகள் உள்ளாட்சி மற்றும் அனைத்து மட்டங்களிலும் பின்பற்ற வேண்டும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.