டில்லி
மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 17 அரசு அச்சகங்களை ஒன்றாக இணைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் பல மாநிலங்களில் அரசு அச்சகங்கள் வேலையின்றி இயங்கி வருகின்றன. இவற்றை ஒருங்கிணத்து நவீனமயமாக்கி ஒரே அச்சகமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அச்சகங்கள் டில்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மேற்கு வங்கம், சண்டிகர், ஒரிசா, மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ளன.
அரசின் அமைச்சகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “பல மாநிலங்களில் அரசு அச்சகங்கள் வேலையின்றி இயங்கி வருகின்றன. அதனால் அரசுக்கு தேவையற்ற நஷ்டம் உண்டாகிறது. எனவே இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அச்சகமாக்கவும், நவீனப் படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் யாரும் வேலை இழக்க நேரிடாது. அதிகமாக உள்ள பணியாளர்கள் வேறு துறைகளில் பணி அமர்த்தப் படுவார்கள்” என கூறினார்.
ஆனால் தொழிலாளர்கள் தாங்கள் ஏற்கனவே அச்சுத்துறையில் பணி புரிந்து, தற்போது அதிகமாக உள்ளதாக கூறி வேறு துறைக்கு மாற்றப் பட்டால் தங்களால் புதிய தொழிலில் பணி புரிவது கடினம் என்பதால் பணி இழக்க நேரிடுமோ என பீதியில் ஆழ்ந்துள்ளனர்.