டில்லி
மத்திய அரசு டிசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளைக் துயரப்பட விட்டுள்ளதாகக் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கூறி உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பிரமுகருமான நவஜோத் சிங் சித்து முன்னாள் மக்களவை உறுப்பினரும் மாநில அமைச்சரும் ஆவார். இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
கடந்த 25017 முதல் 2019 வரை பஞ்சாப் மாநில அமைச்சராகப் பணி புரிந்துள்ளார். சமீபத்தில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்குப் பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நவஜோத் சிங் சித்து தனது டிவிட்டரில், “அக்டோபர் 20141 முதல் மத்திய அரசு டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அமைக்க ஒப்புதல் அளித்ததுடன் டீசலுக்கான தீர்வையை நவம்பர் 2020 வரை 820% உயர்த்தி உள்ளது.
இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய அதிக செலவு செய்து துயரடைய வேண்டி இருந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்த போது அந்த பலனை ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.” என பதிந்துள்ளார்.