டில்லி
நாடெங்கும் 15 ஆம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் திறக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் நீச்சல்குளத்துக்குத் தடை விதிக்கபடுள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சிறிது சிறிதாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் பொழுது போக்கு பூங்காக்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த விவரங்கள் பின் வருமாறு :
பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி
10 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 65 வயதுக்கு அதிகமானோருக்கு அனுமதி கிடையாது
அதிக அளவு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
நீச்சல் குளங்கள் செயல்படத் தடை
பூங்காக்களில் உள்ள உணவகங்களில் 50% மட்டுமே அனுமதி
டிக்கட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்கப்பட வேண்டும்
அனைத்து பார்வையாளர்களுக்கு தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பூங்காக்களில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.