டெல்லி

த்திய அரசு 156 மாத்திரைகளை தடை செய்துள்ளது.

மத்திய அரசு பக்க விளைவுகளையும் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தடை விதித்து வருகிறது. தற்போது 156 காக்டெய்ல் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் முடி வளர்ச்சி, தோல் பராமரிப்பு மற்றும் வலி நிவாரணம், மல்டிவைட்டமின்கள், ஆன்டி-பராசிடிக்ஸ், ஆன்டிஅலெர்ஜி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அடங்கும்.

பொதுவாக நிலையான டோஸ் கலவைகள் ஒரு மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை இணைக்கும் மருந்துகள் “காக்டெய்ல்” மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த வகையான 156 மருந்துகள் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள இந்த தடையால் முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, டோரண்ட், சன் பார்மா, ஐபிசிஏ லேப்ஸ் மற்றும் லூபின் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, எஃப்.டி.சி மருந்தைப் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த மருந்துகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்ம் உயர்மட்ட குழு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமும் (DTAB) இந்த கலவைகளை ஆய்வு செய்து இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 இன் பிரிவு 26 A இன் கீழ், இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை தடை செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபயாடிக் அசித்ரோமைசின் மற்றும் அடாபலீன் ஆகியவற்றின் கலவையானது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வலி நிவாரண மருந்துகளின் பிரபலமான மாத்திரைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.