டில்லி

ந்தியாவில் 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது   இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் முதல் 15-18 வயதுடையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.   அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படுவதால் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது.

அவ்வகையில் தற்போது 12-18 வயதுடையோருக்கு கோர்பேவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த தடுப்பு மருந்து பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.