டெல்லி
மத்திய அரசு சொத்துக்கள் விற்பனை முலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரி கணக்கீட்டில் மாற்றங்கள் அறிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் சொத்துக்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரியை 12.5% ஆக உயர்த்தியது. மேலும் இந்த பரிமாற்றத்தின் போது அளிக்கப்படும் சலுகையான இண்டெக்ஸ்டேஷன் பெனிஃபிட் சலுகை 20% லிருந்து 12.5% ஆக குறைக்கப்பட்டது.
உதாரணமாக ஒருவர் ஒர் வீட்டை வாங்கி மீண்டும் விற்கும் போது அந்த வீட்டின் விலை உயர்ந்திருக்கும். இன்த விலை உயர்வு வீட்டின் மதிப்பு உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டினாலும் ஏற்படக்கூடும், ஒவ்வொரு வருடமும் பண வீக்க குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்ப்டையில் வீட்டை விற்கும் போது கிடைக்கும் லாபத்தை கணக்கிட்டு வருமான வரி செலுத்த வேண்டும்;
இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், நிறைய பொருளிழப்பும் ஏற்படுவதாக மக்களில் பலர் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அர்சு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அதன்படி வீடுகள் மற்றும் சொத்துக்கள் விற்பனைய்ன் போது கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டு வரி செலுத்தும் போது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடும் போது 12.5% வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் பணவீக்கத்தை கணக்கில் கொண்டு வருமானத்தை கணக்கிடும்போது 20% வருமான வரி செல்த்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.