டில்லி,
நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து, அனைத்துவிதமான நடைமுறை களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று செயல்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் பண வரித்தனைக்கு மட்டுமே என்று கூறிய மத்தியஅரசு, தொடர்ந்து கேஸ் இணைப்பு, வங்கி இணைப்பு, வருமான வரி கட்டுபவர்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு, மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என அதிரடி நடவடிகைகைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றதில் இருக்கும்போதே, மத்தியஅரசு தன்னிச்சையையாக வாரம் ஒரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது, உல உரிமையாளர்கள் அனைவரும், தங்களின் நில ஆவணங்களோடு, ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.