பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது, இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் (ஏப்ரல் 8) அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள வரி உயர்வு காரணமாக உலகளவில் எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.

மேலும், சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விலை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.