டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு டிசம்பர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, மத்திய அரசு ஆகஸ்ட் 19, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரை பருத்திக்கான இறக்குமதி வரியை தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது.

அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததுள்ள நிலையில்,  இந்திய ஜவுளித் துறைக்கு அச்சாரமான பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே  செப்.30 வரை பருத்திக்கு வரி விலக்கு அளித்திருந்த  நிலையில், தற்போது இந்த  உத்தரவை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்து அறிவித்து உள்ளது.